நிரந்தர ஜாதி சான்றிதழ் அறிவிப்புக்கு பாராட்டு
புதுச்சேரி: மக்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தும் வகையில், நிரந்தர ஜாதி சான்றிதழ் வழங்கப்படும் என, அறிவித்த புதுச்சேரி அரசுக்கு இளைஞர் அமைதி மையம் பாராட்டு தெரிவித்துள்ளது.மையத்தின் நிறுவனர் எழுத்தாளர் அரிமதி இளம்பரிதி அறிக்கை:மக்களின் நலன் மற்றும் எதிர்காலம் கருதி வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தும் வகையில் நிரந்தர ஜாதி சான்றிதழ் வழங்கப்படும் என, சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தது வரவேற்கத்தக்கது.இதனால் பொதுமக்கள், மாணவர்கள் அடிக்கடி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசிய மில்லை. அரசு ஊழியர்களின் பணிச்சுமை குறையும்.இந்த பயனுள்ள அறிவிப்பால் புதுச்சேரி மக்கள் அனைவரும் பயன் பெறு வர். இத்திட்டத்தை அறிவித்த புதுச்சேரி அரசுக்கு நன்றி.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.