உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதையில் தாக்குதல்

போதையில் தாக்குதல்

அரியாங்குப்பம் : வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் விநாயகம், 32; டிரைவர். இவரது நண்பர் விநாயக மூர்த்தியுடன் நேற்று முன்தினம் இரவு மரப்பாலம் அருகே மது குடித்தனர். போதை அதிகமான நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.அதனை தொடர்ந்து, விநாயகம் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பின் தொடர்ந்து, சென்ற விநாயகமூர்த்தி அவரை இரும்பு கம்பியால் தாக்கினார்.இதில், பலத்த காயமடைந்த விநாயகம், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விநாயகமூர்த்தியை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி