உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கவர்னர் பெயரில் போலி முகநுால் கணக்கு துவங்கி ஆன்லைன் மோசடி செய்ய முயற்சி

 கவர்னர் பெயரில் போலி முகநுால் கணக்கு துவங்கி ஆன்லைன் மோசடி செய்ய முயற்சி

புதுச்சேரி: கவர்னர் பெயரில் போலி முகநுால் கணக்கு துவங்கி ஆன்லைன் மோசடி செய்ய முயற்சித்த கும்பல் குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் பெயரில் முகநுால் (பேஸ்புக்) கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போலி கணக்கை பயன்படுத்தி பொதுமக்களை தொடர்பு கொள்ளும் மர்மநபர்கள், அவர்களது மொபைல் போன் எண்ணை கேட்பதாகவும், பின்னர் அவர்களை ஏமாற்றி பண பரிமாற்றம் செய்ய துாண்டுவதாக புகார்கள் வந்துள்ளன. இந்நிலையில் அந்த போலி முகநுால் கணக்கை மத்திய போலீஸ் அதிகாரி சந்தோ ஷ்குமார் என்பவர் பெயரில் இருந்து ஒரு விளம்பரம் வந்தது. அதில் வீட்டு உபயோக பொருளான நாற்காலி, மேஜை பொருட்கள் குறைந்த விலைக்கு விற்கப்படுவதாகவும், அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்த புகாரின் பே ரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய புதுச்சேரி கவர்னர் தமிழிசை பெயரில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணுக்கு போலி செய்தி அனுப்பிய மோசடி செய்ய சதி நடந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்