உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தானியங்கி சூரிய ஒளி பூச்சி பொறிகள் செயல் விளக்கம்

தானியங்கி சூரிய ஒளி பூச்சி பொறிகள் செயல் விளக்கம்

திருக்கனுார்: திருக்கனுார் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில், ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான காய்கறி மற்றும் மலர் சாகுபடியில் நிலையான பூச்சி கட்டுப்பாட்டிற்கான தானியங்கி சூரிய ஒளி பூச்சி பொறிகள் குறித்த செயல்விளக்க முகாம் நடந்தது. செட்டிப்பட்டில் நடந்த செயல் விளக்க முகாமிற்கு துணை வேளாண் இயக்குனர் ராஜ்குமார் அறிவுறுத்தலின் பேரில், வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கி, காய்கறிகள் மற்றும் மலர் சாகுபடியில் நிலையான பூச்சி கட்டுப்பாட்டிற்கான தானியங்கி சூரிய ஒளி பூச்சி பொறிகள் அமைப்பதன் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். தொடர்ந்து, தானியங்கி சூரிய ஒளி பூச்சி பொறிகள் விவசாயிகளுக்கு ஆத்மா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டன. இதில், செட்டிப்பட்டு, மண்ணாடிப்பட்டு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் திருமுருகன், செயல் விளக்க உதவியாளர் தங்கதுரை ஆகியோர் செய்திருந்தனர். ஆத்மா தொழில்நுட்ப மேலாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை