மேலும் செய்திகள்
கலை பண்பாட்டு துறை இயக்குனருக்கு பாராட்டு விழா
21-Jan-2025
புதுச்சேரி: புதுச்சேரி தமிழ்சான்றோர் பேரவை, தமிழிலக்கிய ஆய்வுக் கழகம், இலக்கியப்பொழில், இலக்கிய மன்றம், வெற்றித் தமிழர் பேரவை, அரசு தமிழ்மாமணி, கலைமாமணி விருதாளர்கள் சங்கம் சார்பில் கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் கலியபெருமாளுக்கு 'கலைக்காவலர் விருது' வழங்கும் விழா நடந்தது.தமிழ் சங்கத்தில் நடந்த விழாவிற்கு, வேல்முருகன் தலைமை தாங்கினார். வெற்றித்தமிழர் பேரவை அமைப்பாளர் கோவிந்தராசு வரவேற்றார். தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவுநர் நெய்தல் நாடன்நோக்க உரையாற்றினார்.பேராசிரியர் பக்தவச்சலபாரதி, உசேன், பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். சபாநாயகர் செல்வம்,பாஸ்கர் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பணி நிறைவு பெறும் கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கலியபெருமாளுக்கு, 'கலைக்காவலர் விருது' வழங்கி பாராட்டினர்.சீனு வேணுகோபால், இளங்கோ, வெங்கடேசன் வாழ்த்தி பேசினர். பூங்கொடி பராங்குசம், மாலிறையன், ராமதாசு காந்தி, பேராசிரியர் அசோகன்,அசோகா சுப்ரமணியன், ஆகியோர் வாழ்த்துப்பா இசைத்தனர்.கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் கலியபெருமாள் ஏற்புரை வழங்கினார்.விஜயலட்சுமி நன்றி கூறினார். செல்வராசு ஆன்மிகச் செம்மல் முத்து, சம்பத், பூபதி பெரியசாமி, லோகநாதன், சீனு, மோகன்தாசு, மாசிலாமணி, செல்வம், சுந்தர முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
21-Jan-2025