| ADDED : மார் 05, 2024 04:46 AM
புதுச்சேரி: புதுச்சேரி தேத்தாம்பாக்கம் அரசு துவக்கப்பள்ளியில் , உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, தேசிய வாய் சுகாதார திட்டத்த்தின் சார்பில் பற்கள் ஆராக்கியத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. விழாவில் பள்ளியின் பொறுப்பாசிரியர் குமரன் வரவேற்றார். தேசிய வாய் சுகாதார திட்ட அதிகாரி டாக்டர் கவிப்பிரியா, மண்ணாடிப்பட்டு குடும்ப நலவழி மைய பல் மருத்துவ அதிகாரி டாக்டர் இளங்கோ ஆகியோர் தலைமையில் மருத்துவக் குழுவினர் பள்ளியில் மாணவர்களுக்கு பற்கள் ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி மாணவர்களுக்கு பல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, இலவச டூத் பிரஷ் மற்றும் பேஸ்ட் வழங்கப்பட்டது.விழாவில் பள்ளி ஆசிரியைகள் அருள்ஜோதி, கிருபா, உமா மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.பொறுப்பாசிரியர் குமரன் நன்றி கூறினார்.