உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பாகூர் அரசுப் பள்ளியில் பாஷா உத்சவ் நிகழ்ச்சி

 பாகூர் அரசுப் பள்ளியில் பாஷா உத்சவ் நிகழ்ச்சி

பாகூர்: பாகூர் அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளியில், 'பாஷா உத்சவ்' நிகழ்ச்சி நடந்தது. மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவின் பேரில், பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, இந்தியாவின் மொழிப் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் வகையில், பாஷா உத்சவ் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, பாகூர் அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளியில், பாஷா உத்சவ் நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர் துரைசாமி வரவேற்றார். தலைமையாசிரியர் பத்மாவதி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், இந்திய மொழிகளின் பெருமை, பன்முகத்தன்மைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதில், 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் தம்பி ராஜலட்சுமி, உமா மகேஸ்வரி, சங்கீதா, கார்த்திகேயன், செல்வி, ரம்யா, சிவபாலன் ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை பிரபாவதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ