| ADDED : பிப் 15, 2024 05:19 AM
புதுச்சேரி, : பெரியமார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.புதுச்சேரி ஜென்மராகினி ஆலயம் எதிரில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு, ஏ.ஐ.டி.யு.சி., மாநில துணை தலைவர் சிவகுருநாதன், கவுரவ தலைவர் சுப்ரமணி தலைமை தாங்கினர்.அடிக்காசு சங்க தலைவர் தயாளன், செயலாளர் பாலா, கிளை செயலாளர் ஜெயமூர்த்தி முன்னிலை வகித்தனர்.சுப்ராயன் எம்.பி., இந்திய. கம்யூ., மாநில செயலாளர் சலீம், ஏ.ஐ.டி.யு.சி., தேசிய செயலாளர் வகிதா நிஜாம், ஏ.ஐ.டி.யு.சி., பொதுச்செயலாளர் சேதுசெல்வம், மாநில தலைவர் தினேஷ் பொன்னையா கண்டன உரையாற்றினர்.பெரிய மார்க்கெட்டில் வழுக்கும் தரை தளத்தை சரிசெய்ய வேண்டும், கழிப்பிட கதவுகள் சரிசெய்ய வேண்டும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம், மின் விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தப்பட்டது.பெரிய மார்க்கெட்டை இடித்து அகற்றி நவீன வசதிகளுடன் புதிய மார்க்கெட் கட்ட முயற்சித்தபோது, ஏ.ஐ.டி.யு.சி., உட்பட பல சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து மார்க்கெட் கட்டும் பணி நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.