உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தகன கொட்டகை புனரமைக்க வரும் 29ம் தேதி பூமி பூஜை

தகன கொட்டகை புனரமைக்க வரும் 29ம் தேதி பூமி பூஜை

புதுச்சேரி : கருவடிக்குப்பம் மயானத்தில் பிராமண சமுதாயத்தினருக்கான தகனக் கொட்டகையை புனரமைப்பதற்கான பூமி பூஜை நாளை மறுநாள் 29ம் தேதி நடக்கிறது.இதுகுறித்து வேதபாரதி பொதுச் செயலாளர் நடராஜன் விடுத்துள்ள அறிக்கை:பாரத பண்பாட்டு அமைப்பான வேதபாரதி, புதுச்சேரியில் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறது. அதன் ஒருபகுதி யாக, கருவடிக்குப்பம் மயானத்தில் உள்ள நுாற்றாண்டை நெருங்க வுள்ள, பிராமணர் சமுதாயத்திற்கான தகனக் கொட்டகை சிதிலமைடந்துள்ளது. இதனை சமூக மக்களின் பொருளுதவியுடன் புனரமைக்கப்பட உள்ளது.இதற்கான செயல்திட்டங்கள் தயாரான நிலையில், கட்டுமான பணி துவங்குவதற்கான பூமி பூஜை வரும் 29ம் தேதி காலை 7:30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் சமூதாய மக்கள் பங்கேற்று, திட்டப்பணி சிறப்பாக நடைபெற பிரார்த்தனை செய்து கொள்ளவும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை