மேலும் செய்திகள்
காகிதக்கூழ் கைவினைப் பயிற்சி
6 minutes ago
இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமைகள்
7 minutes ago
ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
10 minutes ago
வில்லியனுார்: தொண்டமாநத்தம் கிராமத்தில் புதிய அங்கன்வாடி மையம் அமைப்பதற்கு சாய் சரவணன்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். தொண்டமாநத்தம் மாங்குலம் பகுதியில் புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டம் சார்பில் ரூ.1.38 கோடி திட்ட மதிப்பீட்டில் கழிவு நீர் வாய்க்கால் அமைப்பதற்கும் மற்றும் புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் ரூ.32.87 லட்சம் திட்ட மதிப்பீட்டில் நவீன வசதியுடன் புதிய அங்கன்வாடி மையம் அமைப்பதற்கும் பூமி பூஜை விழா நடந்தது. விழாவிற்கு சாய் சரவணன்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டம் செயற்பொறியாளர்கள் ராஜ்குமார், வைத்தியநாதன், உதவி பொறியாளர்கள் லூய்பிரகாசம், குலோத்துங்கன், இளநிலை பொறியாளர்கள் சிரஞ்சீவி, கிருபாகரன், பா.ஜ., நிர்வாகிகள் தியாகராஜன், அண்ணா பிரபாவதி, கருணாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
6 minutes ago
7 minutes ago
10 minutes ago