உள்ளூர் செய்திகள்

பைக் திருட்டு

காரைக்கால்: காரைக்காலில் வீட்டுவாசலில் நிறுத்தியிருந்த பைக்கை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடிவருகின்றனர்.காரைக்கால், மேலவாஞ்சூர் அலிசா நகரை சேர்ந்தவர் முகமது தமீம் அன்சாரி. துணிக்கடையில் வேலை செய்து வருகிறார்.இவர் கடந்த 31ம் தேதி இரவு தனது பைக்கை வீட்டின் வாசலில் நிறுத்தியுள்ளார். நேற்று காலை எழுந்து வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை