இந்திரா சிக்னல் சதுக்கத்தில் பேனர் வைத்தவர் மீது வழக்கு
புதுச்சேரி : இந்திரா சிக்னல் பகுதியில் பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புதுச்சேரி, இந்திரா சிக்னல் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில், திருமண பேனர்கள், அரசியல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதையடுத்து, பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு செயற்பொறியாளர், உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.