உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முன்விரோத தகராறு 5 பேர் மீது வழக்கு பதிவு

முன்விரோத தகராறு 5 பேர் மீது வழக்கு பதிவு

புதுச்சேரி: முன்விரோதம் காரணமாக, இறைச்சி கடைக்காரரை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். உழவர்கரையை சேர்ந்தவர் உமர், 53; இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவருக்கும் மூலக்குளம் ஜே.ஜே., நகரை சேர்ந்த கிஜியோன், வைசாக் இவர்களுக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியில் சென்ற அவரை வழிமறித்து, கிஜியோன், வைசாக், ஆரோன், லிவ்யான், ஜோசப் ஆகியோர், ஓமரை தாக்கி கத்தியால் உடலில் கிழித்து, கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, கிஜியோன் உட்பட 5 பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை