உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறப்பு குழந்தைக்களுக்கு சான்றிதழ்

சிறப்பு குழந்தைக்களுக்கு சான்றிதழ்

புதுச்சேரி : புதுச்சேரி, லாஸ்பேட்டை அசோக் நகரில் அமைந்துள்ள சாரோன் சிறப்பு பள்ளி மற்றும் சமூக நலத்துறை சார்பில் சிறப்பு குழந்தைகள் பராமரிப்பு சட்ட பாதுகாப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.எல்லைப்பிள்ளை சாவடி, சாரதாம்பாள் நகர் சமூக நலத்துறை. அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சமூக நலத்துறை இயக்குனர் ராகினி தலைமை தாங்கினார்.துணை இயக்குநர் கனக ராஜ், கள அதிகாரி ஆறுமுகம், சாரோன் சொசைட்டி ஆப் பாண்டிச் சேரி நிறுவனர் மோகன் கலந்து கொண்டனர். இதில், 15க்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகளுக்கான சட்ட பாதுகாப்பு சான்றிதழ் பெற்றோரிடம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்