மேலும் செய்திகள்
ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் திறப்பு
18-Jul-2025
புதுச்சேரி: புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் மேம்பாட்டு பணி நடந்து வருவதால், பாதுகாப்பு கருதி, நுழைவு வாயில் மாற்றப்பட்டுள்ளது. திருச்சி ரயில்வே கோட்டம் அலுவலக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் 91 கோடி ரூபாய் மதிப்பீல் மேம்பாட்டு பணிகள் நடந்தது வருகிறது. அங்கு, வணிக வளாகங்கள், பயணிகள் தங்கும் அறைகள், ரயில்வே ஊழியர்கள் ஓய்வெடுக்கும் அறைகள்,நகரும் படிகட்டுகள், லிப்ட்டு், பிளாட்பாரங்களுக்கு செல்ல மேம்பாலங்கள், போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில் ஸ்டேஷன் நுழைவாயில் மூடப்பட்டுள்ளது. அதனால், ஏ.டி.எம். , இயந்திரம் அருகில் உள்ள நுழைவு வாயிலை பயணிகள் பயன்படுத்த திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
18-Jul-2025