உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கணக்கெடுப்பு படிவத்தை திருப்பி தராவிட்டால் வாக்காளர் வரைவு பட்டியலில் பெயர் இருக்காது தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் எச்சரிக்கை

 கணக்கெடுப்பு படிவத்தை திருப்பி தராவிட்டால் வாக்காளர் வரைவு பட்டியலில் பெயர் இருக்காது தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் எச்சரிக்கை

புதுச்சேரி: கணக்கெடுப்பு படிவத்தை திருப்பி தராவிட்டால் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாது என, தலைமை தேர்தல் ஜவஹர் தெரிவித்தார். அவர் கூறியதாவது: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் தரப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்தி திருப்பி தராவிட்டால் வரும் டிசம்பர் 9ல் வெளியிடப்படும் வரைவுப்பட்டியலில் பெயர் இருக்காது. கடந்த 2002 வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர், உறவினர்கள் பெயர் காணப்படாவிட்டாலும் கணக்கெடுப்பு படிவத்தில் இருக்கும் தகவல்களை வைத்து பூர்த்தி செய்து தேர்தல்துறையில் தரவேண்டும். படிவம் தந்தால் தான் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறும். இத்தகைய சந்தர்ப்பங்களில் வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள 13 ஆவணங்களை ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க நோட்டீஸ் அனுப்பப்படும். ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் மூன்று முறை வீட்டுக்கு வந்தும் கணக்கெடுப்பு படிவங்களை விநியோகிக்க முடியாத பட்சத்தில் அவ்வாக்காளர்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது. டிசம்பரில் வெளியாகும் வரைவு பட்டியலில் பெயர் இடம் பெறாவிட்டால் உரிமை கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் காலத்தில் படிவம் 6, படிவம் 8 மற்றும் உறுதிமொழிப்படிவம் ஆகியவற்றை தந்து பெயரை புதிதாக சேர்க்கலாம். இச்சந்தர்ப்பங்களில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைக்கலாம்.அதற்கான அறிவிப்பு தரப்படும். ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக பொதுத்தேர்வு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் இருந்தால் அவர்களுக்கு கூடுதல் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கணக்கெடுப்பு படிவத்தை நிரப்புவது தொடர்பான தகவல்கள் புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி இணையத்தில் பதிவிட்டுள்ளோம். கணக்கெடுப்புப் படிவத்தை தமிழில் நிரப்புவது குறித்து https:// ceopuducherry.py.gov.in/admin/latestupdates/Tamil_EF_filling_guide.pdf என்ற இணைய முகவரியை பார்க்கலாம். கணக்கெடுப்புப் படிவத்தைப் ஆங்கிலத்தில் நிரப்புவது குறித்து https://ceopuducherry.py.gov.in/admin/latestupdates/55966568_3.pdf என்ற இணைய முகவரில் காணலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி