உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ. 15.34 கோடி முதல்வர் வழங்கல்

மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ. 15.34 கோடி முதல்வர் வழங்கல்

அரியாங்குப்பம்:புதுச்சேரி மாநிலத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக 15.34 கோடி ரூபாய் நிதிக்கான ஆணையை, முதல்வர் ரங்கசாமி, பயனாளிகளுக்கு வழங்கினார்.மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், மீன்பிடி தடைகால நிவராணம் வழங்கும் நிகழ்ச்சி தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. மீன்வளத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில் வரவேற்றார். சபாநாயகர் செல்வம் முன்னிலை வகித்தார்.புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாகி ஆகிய பகுதியில் உள்ள19 ஆயிரத்து 175 மீனவ குடும்பங்களுக்குமீன்பிடி தடைக் காலத்தில், 8 ஆயிரமாக உயர்த்தப்பட்டநிவாரண தொகை, மொத்தம் 15.34 கோடி ரூபாய் நிதிக்கான ஆணையை முதல்வர் ரங்கசாமி பயனாளிகளுக்கு வழங்கினார். ஐயப்பன் கோவிலுக்கு சென்ற நல்லவாடு கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் விபத்தில் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு மத்திய அரசு விபத்து காப்பீடு, 5 லட்சம் நிதிக்கான காசோலை மற்றும், மணவெளி தொகுதியை சேர்ந்த 104 மீனவர்களுக்கு, முதியோர் உதவித்தொகைக்கான ஆணையை முதல்வர் வழங்கினார்.நிகழ்ச்சியில், அமைச்சர் லட்சுமிநாராயணன், பாஸ்கர் எம்.எல்.ஏ., மீன்வளத்துறை செயலர் மணிகண்டன் உட்பட பலர் உடனிருந்தனர். மீன்வளத்துறை இணை இயக்குநர் தெய்வசிகாமணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ