உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கள உதவியாளர்களுக்கு பணி ஆணை முதல்வர் ரங்கசாமி வழங்கல்

கள உதவியாளர்களுக்கு பணி ஆணை முதல்வர் ரங்கசாமி வழங்கல்

புதுச்சேரி: எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட கள உதவியாளர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பணி நியமன ஆணையை வழங்கினார்.புதுச்சேரி அரசு, நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் காலியாக இருந்த கள உதவியாளர்கள் பணியிடங்களுக்கு கடந்தாண்டு அக்., 8ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவுகளின்படி கள உதவியாளர்களாக தேர்ந்தேடுக்கப்பட்டவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.இதனைத்தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட 25 நபர்களுக்கு பணி நியமன ஆணையினை முதல்வர் ரங்கசாமி சட்டசபை அலுவலகத்தில் வழங்கினார்.நிகழ்ச்சியில் வேளாண் அமைச்சர் ஜெயக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், பாஸ்கர், ரமேஷ், கலெக்டர் வல்லவன், நில அளவைத் துறையின் இயக்குனர் செந்தில் குமார், கண்காணிப்பாளர் சங்கர், உதவி இயக்குனர் ரவீந்திரன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ