உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆற்றில் குழந்தை சடலம்: போலீசார் விசாரணை

ஆற்றில் குழந்தை சடலம்: போலீசார் விசாரணை

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் ஆற்றில் குழந்தையின் சடலம் மிதந்து வந்ததால், பரபரப்பு நிலவியது.புதுச்சேரி, அரியாங்குப்பம் ஆற்றில் பிறந்த சில நாட்களான நிலையில், தொப்புள் கொடியுடன், ஆண் குழந்தையின் சடலம் மிதந்து வந்து, முருங்கப்பாக்கம், கைவினை கிராமம், படகு நிறுத்தம் அருகே ஒதுங்கியது.இதை பார்த்த படகு ஓட்டும் ஊழியர் ரமேஷ், அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார், குழந்தையின் சடலத்தை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர். குழந்தையின் வலது பக்க கை இல்லாமல் இருந்திருந்தது. சடலத்தை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், குழந்தை பிறந்து 5 நாட்கள் ஆகியிருக்கலாம். ஆற்றில் தண்ணீரில் மிதந்த போது, மீன்கள் வலது பக்க கை மற்றும் இடது பக்க கைவிரல்களை தின்றுள்ளது. தண்ணீல் அதிக நாட்கள் இருந்ததால், குழந்தை உடல், பெரிய அளவில் உப்பி கரை ஒதுங்கியிருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.இது குறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, குடும்ப பிரச்னையில், கொலை செய்யப்பட்டதா, அல்லது தவறான முறையில் பிறந்ததால், குழந்தையை, ஆற்றில் வீசி சென்றனரா, என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை