மேலும் செய்திகள்
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
6 minutes ago
புதுச்சேரி: வில்லியனுார் மெயின்ரோடு விவேகானந்தா நகர் ஸ்ரீ மூகாம்பிகை இணை மருத்துவ அறிவியல் கல்லுாரி வளாகத்தில் கியூர் காது கருவிகள் மற்றும் பேச்சு பயிற்சி கிளினிக் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. விழாவில் சிறப்ப விருந்தினராக நெல்லித்தோப்பு பாதிரியார் ஜான்பிரிட்டோ கலந்துகொண்டு விழாவை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வருகை தந்த அனைவரையும் நிர்வாக இயக்குனர் முத்துக்குமரன், ஞானசேகரன் வரவேற்றார். விழாவில் இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. கிறிஸ்துமஸ் சிறப்பு முகாமை வரும் 31ம்தேதி வரை நீட்டித்துள்ளார். சிறப்பு சலுகையாக காது கருவிகள் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். அனைவரும் வந்து ஆலோசனை பெறலாம் என நிர்வாக இயக்குனர் தெரிவித்தார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இயக்குனர் அனுஷா முத்துக்குமரன் நன்றி தெரிவித்தார். இதேபோல், சிதம்பரம், கடலுார் திருத்தனி,அரக்கோணம், வடபழநி மற்றும் காஞ்சிபுரம் கிளைகளில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
6 minutes ago