உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கொடாத்துார் அரசு பள்ளியில் களிமண் சிற்ப பயிற்சி பட்டறை

 கொடாத்துார் அரசு பள்ளியில் களிமண் சிற்ப பயிற்சி பட்டறை

திருக்கனுார்: கொடாத்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில், களிமண் சிற்ப பயிற்சி பட்டறை நடந்தது. பயிற்சி பட்டறைக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ரூபஸ் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் கோமதி வரவேற்றார். கைவினை கலைஞர் ஏழுமலை கலந்து கொண்டு, மாணவர்களுக்கு களிமண் சிற்பம் செய்யும் முறை குறித்து பயிற்சி அளித்தார். இதில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று விநாயகர், பறவைகள், விலங்குகளின் சிலைகள் செய்வது குறித்து பயிற்சி பெற்றனர். பட்டதாரி ஆசிரியர் வள்ளி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ