உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கூட்டுறவு நகர வங்கி பேரவைக் கூட்டம் 

கூட்டுறவு நகர வங்கி பேரவைக் கூட்டம் 

புதுச்சேரி : புதுச்சேரி கூட்டுறவு நகர வங்கி 68வது பொது பேரவைக் கூட்டம் நேற்று நடந்தது.புதுச்சேரி வள்ளலார் சாலை ஆந்திர மகா சபாவில் நடந்த கூட்டத்திற்கு, வங்கியின் துணை மேலாளர் சுசிலா வரவேற்றார். கூட்டுறவு துறை துணை பதிவாளர் வெங்கடசீனிவாச ஆச்சரியலு சிறப்புரையாற்றினார்.கூட்டுறவு நகர வங்கி நிர்வாகி ஜோதிராஜி தலைமை தாங்கி, வங்கி வளர்ச்சிக்காக புதுச்சேரி அரசு பங்கு தொகை ரூ. 7 கோடி அளித்ததிற்காக முதல்வர் மற்றும் கூட்டுறவு துறை செயலர், கூட்டுறவு பதிவாளருக்கு நன்றி தெரிவித்தார். கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.கூட்டுறவு துறை முதுநிலை ஆய்வாளர் சத்யா, துணை மேலாளர் சிவநேசன், வெண்மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். வங்கி துணை மேலாளர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்