உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கூட்டுறவு சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

கூட்டுறவு சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

நெட்டப்பாக்கம் : நத்தமேடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டனர்.நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட நத்தமேடு கிராமத்தில் நத்தமேடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் உருவாக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில், துணை சபாநாயகர் ராஜவேலு புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். பின் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டனர்.கூட்டுறவு சங்கத்திற்கு, தலைவராக விஜயரங்கம், இயக்குனர்களாக வெங்கடேச பெருமாள், மோகன்தாஸ், ராஜசுந்தரம், பரசுராமன், வசந்தா, தங்கம், ராமகிருஷ்ணன், ஹரிகரன் புதிய நிர்வாகிகளை பதவி ஏற்றுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்