உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பேனர் வைக்க தடை: கலெக்டர் அதிரடி

 பேனர் வைக்க தடை: கலெக்டர் அதிரடி

புதுச்சேரி: புதுச்சேரியில் பேனர் வைக்க பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தடை விதித்து கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார். அவரது செய்திக்குறிப்பு: வங்க கடலில் காற்றழுத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் வரும் 19ம் தேதி வரை மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் காற்று மற்றும் லேசான மழை முதல் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனையொட்டி, புதுச்சேரியில், பொது இடங்களில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள பேனர்கள், கட் அவுட்கள்மற்றும் விளம்பர பலகைகள் வைக்க பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு வரும் டிச.14ம் தேதிவரை அமலில் இருக்கும். இந்த தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, தற்போது வைத்துள்ள பேனர்களை அவர்களாகவே அகற்றி, பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். பொது இடங்களில் அகற்றப்படாமல் உள்ள பேனர்களை, உள்ளாட்சி அதிகாரிகள் எவ்வித முன்னறிவிப்பின்றி அகற்றி, அதன் செலவினத்தை பேனர் வைத்த நபரிடம் வசூலிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி