| ADDED : செப் 28, 2026 08:31 PM
: புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கலைக் கல்லுாரியில் துாய்மை பாரதம் நிகழ்ச்சியையொட்டி, மாணவர்கள் துாய்மை பணி மேற்கொண்டனர். நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர் செந்தமிழ்ராஜா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் அய்கதிர்வேல் தலைமை தாங்கினார். தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு, கல்லுாரி வளாகத்தைத் துாய்மை பணி மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து, துாய்மை செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில், கல்லுாரி போராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர் உதயகீதா நன்றி கூறினார்.