உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வணிக உரிமத்தை புதுப்பிக்க ஆணையர் அறிவுறுத்தல்

வணிக உரிமத்தை புதுப்பிக்க ஆணையர் அறிவுறுத்தல்

புதுச்சேரி : வணிக உரிமத்தை புதுப்பிக்க சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி நகராட்சி பகுதிகளில் வணிக உரிமம் பெற்று தொழில் செய்து வரும் சிறு மற்றும் குறு நிறுவனங்கள், வியாபாரிகள் வரும் 2024-25ம் ஆண்டுக்கான வணிக உரிமத்தை வரும் 29ம் தேதிக்குள் புதுப்பித்துக்கொள்ளவேண்டும். வணிக உரிமம் இல்லை என்றால் கடைக்கு சீல் வைக்கப்படும். எனவே, வியாபாரிகள் உடனடியாக வர்த்த உரிமம் பெற்று புதுப்பித்துக்கொள்ளவேண்டும். மேலும், வணிகர்கள் மற்றும் தொழில் செய்பவர்கள் நலன் கருதி புதுச்சேரி நகராட்சி வருவாய் பிரிவு மூலம் வரும் 21ம் தேதி முத்தியால்பேட்டை வணிகர் சங்கத்திலும், 24ம் தேதி புதுச்சேரி குபேர் அங்காடியிலும், 28ம் தேதி புதுச்சேரி திருவள்ளுவர் சாலை வியாபாரிகள் நல சங்க அலுவலகத்திலும், காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை