உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேசிய அளவில் பதக்கம் மாணவிக்கு வாழ்த்து

தேசிய அளவில் பதக்கம் மாணவிக்கு வாழ்த்து

புதுச்சேரி கேலோ இந்தியா போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாணவிக்கு, ஓம்சக்தி சேகர் வாழ்த்து தெரிவித்தார்.கேலோ இந்தியா யூத் விளையாட்டின் 6வது சீசன் போட்டிகள் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் நடந்தது. இதில், மல்லர் கம்பம் போட்டிகள் திருச்சியில் நடந்தது.மல்லர் கம்பம் போட்டியில் தனி நபர் சாம்பியன்ஷிப் பிரிவில் புதுச்சேரியை சேர்ந்த ஓவியா வெண்கலப் பதக்கம் வென்றார். ஓவியா, காந்தி வீதியில் உள்ள சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். தேசிய அளவிலான போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஓவியாவுக்கு, ஓ.பி.எஸ்., அணி செயலாளர் ஓம்சக்தி சேகர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ