உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கைவினை திறன் பயிற்சி முகாம்

 கைவினை திறன் பயிற்சி முகாம்

பாகூர்: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள கைவினை கலைஞர்களுக்கு கைத் தையல் கைவினைத் தொழில்நுட்பம் வழங்கும் நோக்குடன், 'வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு பயிற்சி முகாம் பாகூர் தீபம் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் நடந்து வந்தது. தீபம் கல்வி திறன் மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் புதுச்சேரி கைவினை பொருட்கள் சேவை மையம் ஆகியன சார்பில், முகாமின் நிறைவு விழா, சான்றிதழ் மற்றும் கலைஞர்களுக்கு, கைவினைத் திறன் பயிற்சி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ஜார்ஜ் ஸ்டீபன் ராஜ் வரவேற்றார். புதுச்சேரி கைவினை பொருட்கள் சேவை மைய உதவி இயக்குனர் ரூப் சந்தர், கைவினை சேவை மையத்தின் திட்டங்கள் குறித்து பேசினார். சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று, பயிற்சி முடித்த 50 பேருக்கு சான்றிதழ் மற்றும் கைவினை கலைஞர்களுக்கு கைவினை உபகரணங்களை வழங்கினார். புதுச்சேரி கிராம வங்கி பொது மேலாளர் கணபதி, முன்னணி வங்கி அதிகாரி ராகுல், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் உதவி இயக்குநர் பிரீதிகா ஷர்மா, பத்மஸ்ரீ விருதாளர் முனுசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஏற்பாடுகளை, தீபம் கல்வி திறன் மேம்பாட்டு அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை