உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பகுதிநேர வேலை என ரூ.11.12 லட்சம் மோசடி சைபர் கிரைம் கும்பல் கைவரிசை

 பகுதிநேர வேலை என ரூ.11.12 லட்சம் மோசடி சைபர் கிரைம் கும்பல் கைவரிசை

புதுச்சேரி: புதுச்சேரியில் 8 பேர் மோசடி கும்பலிடம் ரூ.15.93 லட்சம் இழந்துள்ளனர். மூலக்குளத்தை சேர்ந்தவரை, டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், பகுதிநேர வேலையாக வீட்டில் இருந்தபடி ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார். இதைநம்பி, மர்மநபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு தவணைகளாக ரூ. 11 லட்சத்து 12 ஆயிரத்து 477 முதலீடு செய்துள்ளார். பின், அதன் மூலம் வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. இதேபோல், பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த பெண் ஆன்லைனில் துணி ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து, அப்பெண் தொடர்பு கொண்ட மர்மநபர், டெலிவரி பார்ட்னர் பேசுவதாக கூறி முன்பணம் செலுத்தும்படி கேட்டுள்ளார். இதையடுத்து அப்பெண் மர்ம நபருக்கு ரூ.1.97 லட்சம் அனுப்பியுள்ளார். ஆனால், ஆர்டர் செய்த பொருள் எதுவும் வரவில்லை. லாஸ்பேட்டையை சேர்ந்த பெண் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து 1 லட்சத்து 15 ஆயிரம், கோரிமேட்டைச் சேர்ந்தவர் 37 ஆயிரத்து 800, கொத்தபுரிநத்தத்தை சேர்ந்தவர் 61 ஆயிரம், ராமநாதபுரத்தை சேர்ந்தவர் 34 ஆயிரத்து 600, அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் 15 ஆயிரத்து 683, ராமநாதபுரத்தை சேர்ந்தவர் 20 ஆயிரத்து 900 என 8 பேர் 15 லட்சத்து 93 ஆயிரத்து 860 ரூபாய் இழந்துள்ளனர். இதுகுறித்து புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ