உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மாஜி ராணுவ அதிகாரிக்கு கொலை மிரட்டல்

 மாஜி ராணுவ அதிகாரிக்கு கொலை மிரட்டல்

அரியாங்குப்பம்: நிலத்தில் பயிர் செய்ய சென்ற, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த விவசாயியை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சேர்ந்தவர் பரமசிவம், 86; பிரெஞ்சு ராணுவத்தில், அதிகாரியாக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவர், நேற்று முன்தினம் டி.என்.பாளையத்தில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தை பயிரிட சென்றார். அப்போது, அதேபகுதியை சேர்ந்த ஆதிகேசவன், நிலத்தை பயிர் செய்ய குத்தகைக்கு தனக்கு தரவில்லை. அதனால், நிலத்தில் பயிரிடவிடமாட்டேன் என பரமசிவத்தை ஆபாசமாக திட்டி, நிலத்தில் வேலை செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, ஆதிகேசவனை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை