| ADDED : பிப் 02, 2024 03:47 AM
புதுச்சேரி: அரசு பள்ளி ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.முத்தியால்பேட் சாலை, மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் இந்திரா, 38; அரசு பள்ளி ஆசிரியை. இவர் கடந்த 30ம் தேதி அய்யங்குட்டிப்பாளையத்தில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான வீட்டை ரூ. 45 லட்சம் கொடுத்து வாங்கினார். நேற்று ஆட்கள் வைத்து இந்திரா வீட்டை சுத்தம் செய்தார். அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டி, இது என் வீடு நான் வீட்டை லீசுக்கு கொடுத்து இருந்தேன் என கூறி, இந்திராவை வெளியேறுமாறு கூறினர். இந்திரா வீடு வாங்கி பதிவு செய்ததை காண்பித்தபோதும், நாகராஜ் இந்திராவை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.