| ADDED : ஜன 09, 2024 07:11 AM
புதுச்சேரி : ரேஷன் கடைகளை மீண்டும் திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:ஆளும் பா.ஜ., கூட்டணி அரசு பொது வினியோகத்திட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல் படுத்தாமல் உள்ளது. இதனால் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தாறுமாறாக ஏறியுள்ளது. விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அரிசி வியாபாரிகள் சின்டிகேட் அமைத்து, அரிசி விலையை உயர்த்தியுள்ளனர். எனவே, முதல்வர் பொதுவினியோக திட்டத்தின் மூலம் குறைந்த விலையில் தரமான உணவு பொருட்களை வழங்குவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.முதல்வர் உயர்மட்ட கமிட்டி அமைத்து ஏழை, நடுத்தர மக்களுக்கு நியாயமான விலையில் அத்தியாவசிய உணவு பொருட்கள் அரசின் கூட்டுறவு சங்கங்க ளின் மூலம் அமல்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.அரிசி மற்றும் மளிகை மொத்த வியாபாரிகளை அழைத்து முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவினியோக திட்டத்தை செயல்படுத்தவும், மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை மீண்டும் திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். சந்திப்பின்போது, மாநிலக் அவைத் தலைவர் அன்பானந்தம், இணைச் செயலாளர்கள் முன்னாள் கவுன்சிலர் கணேசன், திருநாவுக்கரசு, பொருளாளர் ரவி பாண்டுரங்கன் உடனிருந்தனர்.