உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஆச்சார்யா சிக் ஷா மந்திர் பள்ளியில் தினமலர் - பட்டம் வினாடி வினா

 ஆச்சார்யா சிக் ஷா மந்திர் பள்ளியில் தினமலர் - பட்டம் வினாடி வினா

புதுச்சேரி: வில்லியனுார் ஆச்சார்யா சிக் ஷா மந்திர் பள்ளியில், தினமலர், மாணவர் பதிப்பான பட்டம் இதழின் வினாடி- வினா போட்டி நடந்தது. பள்ளியில் நடந்த போட்டியில், மாணவ, மாணவிகள் மொத்தம் 16 பேர் கலந்து கொண்டனர். அதில், 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. இறுதி சுற்றில், இரண்டு பிரிவுகளுக்கு போட்டி நடத்தப்பட்டது. அதில், பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவிகள் மகிழினி, ஹேமேஷ் முதலிடம் பிடித்தனர். மாணவிகள் நேஹா மற்றும் ஜோசிலா இரண்டாம் இடம் பிடித்தனர். வெற்றிப்பெற்ற மாணவிகளுக்கு பள்ளிமுதல்வர் ஷாலினி பரிசு வழங்கி பாராட்டினார். ஏற்பாடுகளை பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் லலிதா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி