உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வாய்க்கால்களை துார் வார தி.மு.க., மருத்துவர் அணி மனு

 வாய்க்கால்களை துார் வார தி.மு.க., மருத்துவர் அணி மனு

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தி.மு.க., மருத்துவர் அணி மாநில அமைப்பாளர் டாக்டர் ஆனந்த் ஆரோக்கியராஜ், கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது: நகரப்பகுதியில் சின்ன வாய்க்கால், பெரிய வாய்க்கால், உப்பனாறு உள்ளிட்ட அனைத்து வாய்க்கால்களிலும் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கழிவுநீர் ஓட்டம் தடைப்பட்டு, மழைக்காலங்களில் மழைநீர் தெருங்கள் மற்றும் அப்பகுதி வீடுகளில் புகும் அபாயம் உள்ளது. மேலும், அடைப்பு காரணமாக கழிவுநீர் தேங்குவதால், துர்நாற்றம் வீசுவதுடன், பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் சூழல் உள்ளது. கொசுகள் உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, நகரப்பகுதியில் அமைந்துள்ள அனைத்து வாய்க்கால்களையும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக துார்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை