உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விடுதலை நாள் விழா புறக்கணிப்பு தி.மு.க., எம்.எல்.ஏ., நாஜிம் அறிவிப்பு

விடுதலை நாள் விழா புறக்கணிப்பு தி.மு.க., எம்.எல்.ஏ., நாஜிம் அறிவிப்பு

காரைக்கால்: புதுச்சேரி விடுதலை நாள் விழாவை தி.மு.க., புறக்கணிப்பதாக எம்.எல்.ஏ.,நாஜிம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் பா.ஜ.,கூட்டணி அரசு கொண்டு வந்த மக்கள் நல திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் முட்டுக்கட்டை போடுகின்றார். கல்வித்துறைக்கு இயக்குனரை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக பல பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. கடந்த 1954 அக்டோபர் 18 புதுச்சேரி, கீழுர் என்ற இடத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்தியாவுடன் இணைப்பு தேவை என்று பெரும்பான்மையானோர் வாக்களித்ததால் பிரஞ்சு ஆட்சியிலிருந்து விடுதலை கிடைத்துள்ளது. ஆனால் பா.ஜ., ஆட்சியில் புதுச்சேரிக்கு விடுதலை கிடைக்கவில்லை. புதுச்சேரியில் ் எம்.எல்.ஏ.,களுக்கு உரிமைகள் கிடைக்கவில்லை. புதுச்சேரி தற்போது கொலை நகரமாக மாறி சட்டம் ஒழுங்கு கேட்டுள்ளது. எனவே விடுதலை நாள் கொண்டாட்டத்தை காரைக்கால் மாவட்ட தி.மு.க., புறக்கணிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை