மேலும் செய்திகள்
கலெக்டர் அலுவலகம் முற்றுகை காங்., நிர்வாகிகள் கைது
4 minutes ago
வாய்க்கால்களை துார் வார தி.மு.க., மருத்துவர் அணி மனு
6 minutes ago
கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
1 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் மக்கள் மன்றம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் நடந்தது. இதில், 25க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய சைபர் குற்றங்கள் தொடர்பாக குறைகளை தெரிவித்தனர். தொடர்ந்து, பொதுமக்கள் தவறவிட்ட ரூ. 5.76 லட்சம் மதிப்பிலான 19 மொபைல் போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், பொதுமக்கள் தங்களது பெயர்களில் இருக்கும் வங்கி கணக்குகள் மற்றும் சிம் கார்டுகளை சைபர் குற்றங்கள் புரிவோருக்கு பணத்திற்காக விற்பது மற்றும் மற்றவர்களிடம் இருந்து வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். வீட்டிலுருந்தே ஆன்லைன் மூலமாக பகுதி நேர வேலையாக அதிக பணம் சம்பாதிக்கலாம் என, யாரேனும் ஆசை வார்த்தைகள் கூறினால் அதனை நம்பி யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். வங்கி கணக்கு சஸ்பெண்ட் செய்துள்ளதாக கூறி, வாட்ஸ் ஆப்பில் வரும் லிங்க் மற்றும் மெசேஜ்களை கிளிக் செய்யக்கூடாது என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், சைபர் குற்றம் சம்பந்தமாக புகார் மற்றும் சந்தேகம் இருந்தால் 1930 மற்றும் 0413--2276144, 9489205246 மற்றும் மின்னஞ்சல்: cybercell-py.gov.inதொடர்பு கொள்ளலாம். இணையத்தில் புகார் அளிக்க www.cybercrime.gov.in. பயன்படுத்தவும்.
4 minutes ago
6 minutes ago
1 hour(s) ago