உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடும்ப பிரச்னையில் டாக்டர்  தற்கொலை முயற்சி

குடும்ப பிரச்னையில் டாக்டர்  தற்கொலை முயற்சி

புதுச்சேரி: குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலைக்கு முயன்ற டாக்டரை போலீசார் தடுத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிவேல், 28 வயது டாக்டர். இவர் கோரிமேட்டில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றார். இவர் தனது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களாக மன உளச்சலில் இருந்து வந்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, பழைய துறைமுகம் பாலத்திற்கு சென்ற மணிவேல் சிறிது நேரம் பாலத்தில் உட்கார்ந்திருந்தார். திடீரென அவர் பாலத்தின் மேல் ஏறி குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது, மனம் மாறிய அவர் கடலில் குதிக்காமல், பாலத்தில் கம்பியை பிடித்து தொங்கிய போது, கரையில் இருந்தவர்கள் பார்த்து கூச்சலிட்டனர்.கடற்கரை பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்து ஒதியஞ்சாலை போலீசார், அங்கிருந்த மீனவர்கள் உதவியுடன், டாக்டரை மீட்டனர். பின் போலீசார் டாக்டருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்