உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  போதை பொருட்கள் தடுப்பு ஆலோசனை கூட்டம்

 போதை பொருட்கள் தடுப்பு ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி: புகையிலை மற்றும் போதை பொருட்களை தடுப்பது குறித்து அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. சீனியர் எஸ்.பி., கலைவாணன் தலைமையில் நடந்த கூட்டத்தில், போலீஸ், வருவாய், கல்வி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், இம்மாதம் துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை சீனியர் எஸ்.பி., கேட்டறிந்தார். தொடர்ந்து சீனியர் எஸ்.பி., பேசுகையில், 'மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், கடற்கரைச் சாலை உள்ளிட்ட இடங்களில் போதைப் பொருளுக்கு எதிராகவும், கல்வி நிறுவனங்களில் போதைப் பழக்கத்தின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி