உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருக்கனுார் : சோரப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்த சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.தலைமையாசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். ஆசிரியை சூரியகுமாரி வரவேற்றார். புதுச்சேரி அன்னை தெரேசா பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன மருந்தியல் கல்லுாரி இணை பேராசிரியர் நுாருல் அலம் கலந்து கொண்டு, போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். மாணவ, மாணவியருக்கு உடல் மற்றும் மனநல ஆரோக்கியம் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.ஆசிரியர்கள் விஜேஷ், ஏஞ்சல் மேரி, சடகோபன், ராஜேந்திரன், முருகன், மாணிக்கவேலு, மோகன், வேலவன், அலுவலக ஊழியர்கள் மாவீரன், தாட்சாயணி, விஜயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை