உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின் நுகர்வோர் முகாம் 12ம் தேதி நடக்கிறது

மின் நுகர்வோர் முகாம் 12ம் தேதி நடக்கிறது

புதுச்சேரி: சேதராப்பட்டு உதவிப் பொறியாளர் அலுவலகத்தில், மின்நுகர்வோர் குறை தீர்வு முகாம் 12ம் தேதி நடக்கிறது.மின்துறை கிராமம் வடக்கு இயக்குதலும் பராமரித்தலும் பிரிவு செயற்பொறியாளர் செய்திக்குறிப்பு:சேதராப்பட்டு, பிப்டிக் தொழிற்பேட்டையில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறை தீர்வு முகாம், நாளை மறுநாள் 12ம் தேதி, காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடக்கிறது.முகாமில், மின்நுகர்வோர்கள், மின்பட்டியல் குறைந்த மின் அழுத்தம், மின் மானிகளின் குறைபாடு, தெருவிளக்கு மற்றும் மின்நுகர்வு தொடர்புடைய குறைகள் இருப்பின் நேரில் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி