உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கல்வி சீர் திருவிழா

கல்வி சீர் திருவிழா

புதுச்சேரி: புதுச்சேரி வனிதா கிளப் சார்பில், வைசியால் தெருவில் உள்ள அரசு உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளியில் கல்வி சீர் திருவிழா நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் நாராயணன் வரவேற்றார். வனிதா கிளப் தலைவர் ரூபினிமோகன், செயலாளர் யோகலட்சுமி, பொருளாளர் சித்ரா முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, 25 லிட்டர் கொள்ளவு கொண்ட சுத்திகரிக்கும் ஆர்.ஓ., மிஷின் மற்றும் மாணவர்ளுகளுக்கு நோட்டு, பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், வனிதா கிளப் மாவட்ட ஆளுனர்கள் ஆதிகேசவன், பாலமுருகன், சதிஷ்குமார், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்