உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி

திருபுவனை: திருபுவனை அருகே கோவில் திருவிழாவில், டியூட் லைட் மாற்றிய எலக்ட்ரீஷியன் மின்சாரம் தாக்கி இறந்தார். மதகடிப்பட்டுபாளையம், கஸ்துாரிபாய் நகரை சேர்ந்தவர் அருணாசலம் 50; எலக்ட்ரீஷியன். இவர் நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு அதே பகுதியில் அய்யனார் கோவில் திருவிழாவிற்காக அலங்கார மின்விளக்குகள் மற்றும் டியூப் லைட்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டார். மின்கம்பத்தில் மூங்கில் ஏணியில் ஏறி டியூப் லைட் மாற்றினார். அப்போது எதிர்பாராத விதமாக மின் கம்பியில் கைபட்டு, மின்சாரம் தாக்கி, துாக்கி வீசப்பட்டவரை, அப்பகுதி மக்கள் மீட்டு கலிதீர்த்தாள்குப்பம் தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புதுச்சேரி மின்துறை திருவண்டார்கோவில்இளநிலை பொறியாளர் பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில், மின் விளக்கை மாற்றியமைக்க அழைத்துச் சென்ற கோவில் பூசாரி செல்வராசு 69; மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை