| ADDED : பிப் 06, 2024 11:29 PM
புதுச்சேரி : பிராந்திய மொழியில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், டாக்டர்களை பணியமர்த்த வேண்டும் என, செல்வகணபதி எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை;புதுச்சேரி உட்பட பல மாநில அரசுகள் சி.பி.எஸ்.இ., கல்வியை ஆரம்ப நிலையை ஆங்கில வழி கல்வியில் அறிமுகப்படுத்தி வருகின்றன.பிராந்திய மொழிகளில் சி.பி.எஸ்.இ., தரத்தில் பாட புத்தகங்கள் இல்லாததால், தமிழ் மீடியத்திற்கு மாற முடியவில்லை. தொடக்க கல்வி பிராந்திய மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் என, மத்திய அரசு,மாநில நிர்வாகங்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும்.உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர், கல்லுாரி விரிவுரையாளர், உள்ளூர் மொழிகளில் புலமை பெற்றவர்களாக பணியமர்த்த வேண்டும். உயர்நிலை பள்ளி முதல்வர், கல்லுாரி விரிவுரையாளர்கள் நியமனம் யூ.பி.எஸ்.சி., மூலம் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணிஅமர்த்தப்படுகின்றனர்.இவர்களுக்கு பிராந்திய மொழியில் கற்பிக்க போதிய பயிற்சி இல்லை.எனவே, பிராந்திய மொழி தெரிந்தவர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவதை உறுதி செய்ய, பணி நியமன விதியில் திருத்தம் செய்ய வேண்டும்.பிராந்திய மொழியில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், டாக்டர்களை பணியமர்த்த வேண்டும். யூ.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் பிற உயர்கல்வி அமைப்புகள் ஆட்சேர்ப்பு விதிகளில் குறிப்பிட்ட மாற்றத்தை சேர்க்க வேண்டும்.இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.