| ADDED : பிப் 14, 2024 03:44 AM
புதுச்சேரி : வில்லியனுார் விவேகானந்தா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மையம் சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளி துணை முதல்வர் ரவி தலைமை தாங்கினார். சுற்றுச் சூழல் மைய ஒருங்கிணைப்பாளர் வீரபத்திரன் வரவேற்றார்.விரிவுரையாளர் முரளி முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் அமரேந்திரன் நோக்க உரையாற்றினார். பட்டதாரி ஆசிரியர் பிரியதர்ஷினி தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற விரிவுரையாளர் முத்துசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி பேசி மாணவர்களுக்கு கழிவு பொருட்களை மீண்டும் எவ்வாறு பயன்படுத்துவது பற்றிய செய்முறைகளை செய்து காட்டினார். ஏற்பாடுகளை விரிவுரையாளர்கள் வேல்முருகன், இறைவாசன், ராஜேஷ், பட்டதாரி ஆசிரியர்கள் வரலட்சுமி, செந்தில் குமாரி,வனஜா ஆகியோர் செய்திருந்தனர். பட்டதாரி ஆசிரியர் நாகப்பன் நன்றி கூறினார்.