உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சமத்துவ பொங்கல் விழா 

சமத்துவ பொங்கல் விழா 

புதுச்சேரி ; கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், துணை முதல்வர் வினோலியா டேனியல் முன்னிலை வகித்தனர்.பொதுப்பணித்துறை நீர்பாசனக் கோட்ட செயற் பொறியாளர் பாலசுப்ர மணியன், மாணவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.தமிழ் சங்க துணைத் தலைவர் திருநாவுக்கரசு, சுந்தராம்பாள் அறக்கட்டளை தலைவர் மாரியப்பன் வாழ்த்தி பேசினர்.புதுச்சேரி மாநில ஒருங்கிணைந்த கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தரராஜன், போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். முன்னதாக, பொங்க லிட்டு வழிபட்டனர். தொடர்ந்து, கோலப்போட்டி நடந்தது. ஏற்பாடுகளை பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்