உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரயில் முன் பாய்ந்து மாஜி அதிகாரி தற்கொலை

ரயில் முன் பாய்ந்து மாஜி அதிகாரி தற்கொலை

காரைக்கால்: காரைக்காலில் உடல்நிலை பாதிக்கப்பட்ட முன்னாள் மீன்வளத்துறை ஆய்வாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.காரைக்கால், நாய்க்கன் குளத்து வீதியை சேர்ந்தவர் ராமசாமி, 83; ஓய்வு பெற்ற மீன்வளத்துறை ஆய்வாளர். இவர் சில ஆண்டுகளாக தலையில் கட்டி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக ராமசாமியின் மண்டையில் வலி அதிகமாக இருந்ததால், அவதிப்பட்டு வந்தார். நேற்று மதியம் 12:00 மணி அளவில் திருச்சியிலிருந்து காரைக்கால் வந்த ரயில் முன், பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்த நிரவி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.அவர் எழுதிய கடிதம் சிக்கியது. அதில் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்கிறேன்' என, இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை