மேலும் செய்திகள்
சுதானா நகர் நல்வாழ்வு சங்கம் கூட்டம்
1 hour(s) ago
பைரவர் கோவிலில் நவ துர்கா ஹோமம்
1 hour(s) ago
கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி உட்பட 3 பேர் கைது
2 hour(s) ago
புற்று நோய் பாதித்த இளைஞர் தற்கொலை
2 hour(s) ago
புதுச்சேரி: மண்ணாடிப்பட்டில் நிலத் தகராறில் தந்தை, மகனை கத்தியால் குத்திய நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, மண்ணாடிப்பட்டு, பிள்ளையார் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர்கள் விவசாயி விஜயன், 45, மற்றும் கோபி. இருவருக்கும் நிலப் பிரச்னை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. நேற்று இரவு மீண்டும் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கோபி, விஜயன் வீட்டிற்கு சென்று, அவரையும், அவரது தந்தை பரசுராமனையும் வயிற்றில் கத்தியால் குத்தினார். இருவரும் சத்தம் போட்டதால், அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். கோபி அங்கிருந்து தப்பிச் சென்றார். படுகாயமடைந்த விஜயன், பரசுராமன் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டனர். திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து, கோபியை தேடி வருகின்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago