உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மணிலா பயிருக்கான வயல்வெளி பள்ளி

மணிலா பயிருக்கான வயல்வெளி பள்ளி

புதுச்சேரி : பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், மணிலா பயிருக்கான உழவர் வயல்வெளிப் பள்ளி நடந்தது.வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மூலம் இணைந்து ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகத்தின் கீழ் நெல் பயிர், பருத்தி, மணிலா, காய்கறி, வாழை, தென்னை, மரவள்ளி, ஆகிய பயிர்களுக்கு வயல்வெளிய பள்ளி நடத்தி பயிர்களில் ஏற்படும் தீமை செய்யும் பூச்சிகளை அழிக்க,நோய் தாக்குதல் தடுக்கும் முறைகள் குறித்த வயல்வெளிப் பள்ளி நடத்தப்பட உள்ளது. மணிலா பயிருக்கான வயல்வெள்ளி பள்ளி துவக்க விழா வேளாண் அறிவியல் நிலையத்தில் நடந்தது.விழாவிற்கு, வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் வல்லுனர் விஜயகுமார் மணிலாப் பயிரில் நன்மை மற்றும் தீமை தரும் பூச்சியினங்களை கண்டறிந்து அதற்கேற்றவாறு விவசாய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.வேளாண் அதிகாரி தண்டபாணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை