உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு

கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த, நான்கு மதுபான கடைகளுக்கு, சட்டமுறை எடையளவை துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர். புதுச்சேரியில் மதுபானக் கடைகளில், அதிகபட்ச சில்லறை விலையை விட, கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, புதுச்சேரி சட்டமுறை எடையளவை துறை அதிகாரிகள் மதுபான கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், உருளையன்பேட்டை, சித்தன்குடி, திருவள்ளுவர் சாலை மற்றும் சேதராபட்டு ஆகிய பகுதிகளில் இயங்கும் நான்கு மதுபான கடைகளில், அதிகபட்ச விற்பனை விலையை விட, கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சட்டமுறை எடையளவை துறை அதிகாரிகள், நான்கு மதுபான கடைகளுக்கும் தலா 2,500 ரூபாய் அபராதம் விதித்தனர். இதே குற்றத்தில் மீண்டும் ஈடுபட்டால், இரண்டாவது முறை 50 ஆயிரம் ரூபாய் வரையும், மூன்றாவது முறை ஈடுபட்டால், ஒரு லட்சம் ரூபாய் வரை அல்லது வழக்கு பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். மேலும், பொதுமக்கள், வியாபாரிகள் இது தொடர்பாக புகாரளிக்க விரும்பினால், புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ளசட்டமுறை எடையளவை கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0413--2253462, 2252493 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !