| ADDED : பிப் 17, 2024 11:23 PM
அரியாங்குப்பம்: கடல் அரிப்பை தடுக்க துாண்டில் வளைவு முறையில் கருங்கற்கள் கொட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர் காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.புதுச்சேரி மீனவர் காங்., சார்பில், அரியாங்குப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காங்., தேசிய மீனவரணி செயலாளர் காங்கேயன் தலைமை தாங்கினார். தலைவர் ராஜசேகர் முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில், புதுச்சேரி கடற்கரை மீனவர் பகுதியில் கடற் சீற்றத்தால், வீடுகள், படகுகள் சேதமடைவதால், மீனவர்கள் பாதிக்கின்றனர். எனவே கடல் அரிப்பை தடுக்க, துாண்டில் வளைவு முறையில் கருங்கற்கள் கொட்ட வேண்டும்.அரியாங்குப்பம் ஆற்றை துார் வார வேண்டும். மீனவர்களை, பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினர். முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், முன்னாள் எம்.எல்.ஏ., கங்காதரன், மாநில பொதுச் செயலாளர் சங்கர், வட்டார காங்., தலைவர் அய்யப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.